பிக்பாஸ் ஜோடிகள் .. வேற லெவல் GRAND FINALE.. யாரு வந்துருக்காங்க பாருங்க.. TRENDING ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த முக்கிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.

vijay tv biggbossjodigal grand finale viral pics பிக்பாஸ் ஜோடிகள்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது பிக்பாஸ் நிகழ்ச்சிதான் எப்போதுமே அனைவராலும் பார்க்கப்படும் டாப் நிகழ்ச்சியாகவும் அன்றைய தினங்களில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay tv biggbossjodigal grand finale viral pics பிக்பாஸ் ஜோடிகள்

இதுவரை விஜய் டிவியில் நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு திரை மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் கமல்ஹாசன் 4 சீசன்களையும் தொகுத்து வழங்கியிருந்தார். பிக்பாஸ் குரல் வழிநடத்த அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் சுமார் 100 நாட்களுக்கு இருக்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார்.

vijay tv biggbossjodigal grand finale viral pics பிக்பாஸ் ஜோடிகள்

இதேபோல் கடைசி சீசனில் ஆரி வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசன் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில்தான் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. பிக்பாஸ் போட்டியாளர்களை மையமாக வைத்து தொடங்கப்பட்ட பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அணி சேர்ந்து தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர்.

பாலாஜி, அறந்தாங்கி நிஷா, செண்றாயன், ஜூலி, அனிதா சம்பத் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி தற்போது நடந்துள்ளது. நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் சிறப்பு நடுவர்களாக வீற்றிருக்கும் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்கு அனைத்து பிக்பாஸ் பிரபலங்களும் வருகை தந்திருக்கின்றனர்.

குறிப்பாக லாஸ்லியா, ஓவியா, ரம்யா பாண்டியன் என பலரும் இந்நிகழ்ச்சிக்கு வருகைதந்ததுடன்  அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

பிக்பாஸ் ஜோடிகள் .. வேற லெவல் GRAND FINALE.. யாரு வந்துருக்காங்க பாருங்க.. TRENDING ஃபோட்டோஸ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay tv biggbossjodigal grand finale viral pics பிக்பாஸ் ஜோடிகள்

People looking for online information on BBJodigal, Trending, VijayTelevision will find this news story useful.