VIDEO: BIGGBOSS சீசன் 6 ல ரக்சன் & ஜாக்குலினா? இதுவும் நல்லா தான் இருக்கும்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | BREAKING: பிரபல இயக்குனர் இயக்கத்தில் R J பாலாஜி நடிக்கும் புதிய படம்.. செமயான Combo இது! அசத்தல் அப்டேட்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதியில் அந்த வாரம் வெளியேறப் போவது யார் என்கிற அறிவிப்பை நடிகர் கமலஹாசனே அறிவிப்பார். மேலும் போட்டியாளர்கள் செய்த செயல்களை விமர்சிப்பார். வாராவாரம் ஒரு சிறப்பு தகவலையும், சிறந்த புத்தகங்களையும் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் பரிந்துரைப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சுமார் 100 நாட்கள் வரை இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏராளமான போட்டிகள்  வழங்கப்படும்.

இப்படி அனைத்து சவால்களையும் கடந்து, கடைசி வரை இருக்கும் நபர்களில் ஒருவர், வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முன்னதாக, அந்த வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுதும் தமிழில் ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடைபெறும். கடந்த இரண்டு சீசன் மட்டும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை நடைபெற்றது.  முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜூ ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றனர்.

சமீபத்தில் முடிந்த ஐந்தாவது சீசனும் கடந்த 4வது சீசனை போல் கடந்த அக்டோபர் மாதம் தான் தொடங்கியது. இந்நிலையில் 6வது சீசன் விரைவில் வரும் அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முன்னோட்ட வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. 

பொதுவாக, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் தான் பெரும்பாலும் கலந்து கொள்வார்கள். முதல் முறையாக பொது மக்களும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையை சேர்ந்த இருவரும் ஊட்டியை சார்ந்த இருவரும் என சாமானியர்கள் 4 பேர் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பிரபல தொகுப்பாளர்கள் ரக்சன் மற்றும் ஜாக்குலின் இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை இருவரும் இணைந்து தொகுத்து வழங்கிய நிலையில் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்நிகழ்வு ஏற்படுத்தலாம். இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Also Read | வடிவேலு நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'.. தலைவன் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

VIDEO: BIGGBOSS சீசன் 6 ல ரக்சன் & ஜாக்குலினா? இதுவும் நல்லா தான் இருக்கும் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay TV BIGGBOSS season 6 contestant latest sources

People looking for online information on Bigg Boss season 6 contestant, Bigg Boss Tamil, Biggboss, Jacquline Lydia, Kamal Haasan, Rakshan, Vijay tv, Vijay TV BIGGBOSS Show will find this news story useful.