ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | Bigg boss 6 tamil : மயங்கி விழுந்த ஆயிஷா.. சண்டையை மறந்து தூக்கிக் கொண்டு ஓடிய அசீம்.! பிக்பாஸில் பரபரப்பு
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் பொம்மை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேட்பதற்கு ஏதோ பொம்மை டாஸ்க் என்றால், சிறு குழந்தை தனமான டாஸ்க் என நினைத்துவிட முடியாது. முந்தைய சீசன் பொம்மை வரலாற்றை சற்று பின்னோக்கி திரும்பிப் பார்த்தால் அங்கு நடந்ததெல்லாம் களேபரம்தான். அப்படித்தான் இம்முறை பொம்மை டாஸ்க்கின் முதல் நாளிலேயே இதுவரை அமைதியாக இருந்த மணிகண்ட ராஜேஷ், பொங்கி எழுந்துள்ளார். போக போகதான் இந்த டாஸ்க் எதுவரை போக போகிறது என தெரியவரும்.
Also Read | Bigg boss 6 tamil : “மன்னிப்பு கேட்டும் அதிகாரம் பண்றாரு”.. பரபரப்பான 3வது வார நாமினேஷன்.. !!