ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரின் சமீபத்திய எபிசோட் வைரலாகி வருகிறது.
Also Read | "மொத்த வீடும் எதிர்த்து நின்ற போதும்".. பிக்பாஸ் சொன்ன வாழ்த்து.. உடைந்து அழுத அசீம்..!
பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் பிரிந்து வாழ தொடங்கி, அவர்களின் குழந்தைகள் தனித்தனியாக வாழ, பின்னர் அவர்கள் குறித்த உண்மையும் தெரிய வர இப்படி பாரதி கண்ணம்மாவில் வரும் ஒவ்வொரு நகர்வும் விறுவிறுப்பை கூட்டியது.
ஹேமா & லெட்சுமி இருவரும் பாரதியின் குழந்தைகள் என டிஎன்ஏ ரிசல்ட் வந்து விட்டது. பாரதியின் சந்தேகங்கள் தீர்ந்துவிட்டது.
தன்னுடைய குழந்தைகள் மற்றும் கண்ணம்மாவுடன் வாழ பாரதி ஆசைப்பட, கண்ணம்மா தன்னுடைய மகள்களுடன் பூர்வீக கிராமத்துக்கு சென்றுவிட, கண்ணம்மாவை பாரதி தேடி பூர்வீக கிராமத்துக்கு சென்றார்.
அந்த ஊரில் பாண்டி எனும் நபர் தனக்கும் கண்ணம்மாவிற்கும் தவறான உறவு உள்ளது என்று கூறுவதால் பாரதிக்கும் பாண்டிக்கும் ஏற்படும் சண்டையில் பாரதியின் தலையில் காயம் ஏற்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதி பழைய நினைவுகளை இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மகள்களுடன் பாரதியை பார்க்க வரும் கண்ணம்மாவை பார்த்து "இவங்க யாருனு தெரியல" என பாரதி சொல்கிறார்.
பாரதிக்கு பழைய நினைவுகள் வர வேண்டும் என்றால் கண்ணம்மா பாரதியுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுரை கூறுகிறார்.
பாரதியுடன் இருக்க முடியாது என கண்ணம்மா கூறுகிறார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா எடுக்கும் முடிவு என்ன என்பதை ரசிகர்கள் தற்போது எதிர்பார்த்து வருகின்றனர்.
Also Read | குடும்பத்துடன் இலங்கையில் இன்பச் சுற்றுலா... சரத்குமார் & வரலெட்சுமி பகிர்ந்த சூப்பர் PHOTOS!