BHARATHI KANNAMMA: கண்ணம்மா குட் நியூஸ் சொல்ல.. பாரதி ரொமான்ஸ் பண்ண.. என்னய்யா நடக்குது? வைரல் ப்ரோமோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.   திங்கள் - சனி இரவு 9 முதல் 9.30 வரை ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் மிக முக்கியமான கண்ணம்மா கேரக்டரில்  வினுஷா தேவி நடித்து வருகிறார்.

Vijay TV Bharathi Kannamma serial promo 02 march 2022
Advertising
>
Advertising

பாரதி கண்ணம்மா

பாரதியாக நடிகர் அருண் பிரசாத் முக்கியமான கேரக்டராக நடித்து வருகிறார். தினமும் புதுப்புது ட்வீஸ்ட்டுகளை இந்த சீரியல் வைத்து வரும் நிலையில் சீரியலின் எபிசோட்கள் அடுத்த நாள் இரவு 9 மணி எப்போது ஆகும் என்ற ஆவலை பார்வையார்களிடம் தூண்டியுள்ளது.

அதுவும் சமீபத்திய எபிசோட்களில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் அரங்கேறி பார்வையாளர்களின் பல்சை எகிற வைத்துள்ளது. இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பாரதி கட்டிலில் அமர்ந்து லேப்டாப் பார்த்து கொண்டிருக்க கண்ணம்மா புன்னகை ததும்ப அங்கு வருகிறார்.

ரேஷன் கார்டு வந்திருக்கு

''பாரதி மாமா இங்க பாருங்க'' என்று கூறும்  கண்ணம்மா, பாரதியிடம் இருந்த லேப்டாப்பை வாங்கி வைத்து விட்டு ''நமக்கு புது ரேஷன் கார்டு வந்திருக்கு.இங்க பாருங்க''என்று  மகிழ்ச்சி பொங்க கூறுகிறார். இதற்கு பாரதி, ''ரேஷன் கார்டுதான வந்திருக்கு.. பாஸ்போர்ட் வந்த மாதிரி சொல்லிட்டு இருக்க'' என்று பதில் கொடுக்கிறார்.

இதற்கு சிறு செல்ல கோபம் கொண்ட கண்ணம்மா ,'' எவ்வளவோ ஆசை, ஆசையாய் வந்தேன் தெரியுமா?.. முதல் முறை உங்க பெயர் குடும்ப தலைவர் என்று வருகிறது'' நம்மை அரசாங்கம் குடும்பமாக ஏத்துக்கிட்டாங்க என்பதற்கு இது ஒன்னுதான் அத்தாட்சி'' என்று முக மலர்ச்சியுடன் கூறுகிறார். அப்போது பாரதி ரொமான்ஸ் மோடுக்கு செல்ல கண்ணம்மா அவரிடம் இருந்து நழுவி செல்வது போல் ப்ரோமா அமைந்துள்ளது.

சமீபத்திய ஸ்டோரி

இந்த சீரியலில் தற்போது பாரதி, கண்ணம்மா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் தான் லட்சுமியின் தந்தை, பாரதி தான் என கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவில் கண்ணம்மா லட்சுமியிடம் போட்டு உடைத்தார். இந்த எபிசோடுகள், மக்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  இந்நிலையில் இந்த ப்ரோமோ பழசா? அல்லது கனவா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay TV Bharathi Kannamma serial promo 02 march 2022

People looking for online information on Bharathi kannamma serial bharathi kannamma serial promo, Bharathi Kannamma Serial Today will find this news story useful.