LEO : மைனஸ் 5 டிகிரியிலயா.. விஜய் நடிக்கும் லியோ பட ஷூட்டிங்.. காஷ்மீர்ல எங்க? செம அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Beast படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' படம்  கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கினார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "வாத்தி"யாக இளையராஜா.. மாணவர் போல மாறிய தனுஷ்.. விஜய் சேதுபதி படத்துக்காக இணைந்த காம்போ

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியானது. வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  நேறறு வெளியானது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க உள்ளது என தகவல்கள் கூறப்பட்டன.

Images are subject to © copyright to their respective owners.

இதற்காக படக்குழுவினர் தனி விமானத்தில் படப்பிடிப்புக்கு பயணம் செய்தனர். இந்த பயணத்தில் நடிகை த்ரிஷா, நடிகை, ப்ரியா ஆனந்த், விஜய் மற்றும் பலர் கலந்து கொண்டு காஷ்மீர் சென்றனர். இந்நிலையில் தான் லியோ படத்தின் படப்பிடிப்பு ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள சிறிய நகரத்தில் சுமார் மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் குளிர்வெப்பநிலையில் நடப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Also Read | வெற்றிமாறன் உருவாக்கத்தில் வெப்சீரிஸாகும் அற்புதம் அம்மாள் பயோபிக்? இயக்குநர் இவரா?

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Trisha Leo Shooting Jammu Kashmir Pahalgam update

People looking for online information on Lokesh Kanagaraj, Mysskin, Sanjay Dutt, Vijay Trisha Leo Jammu Kashmir Pahalgam will find this news story useful.