விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைலில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த ஐஸ்வர்யா.. செம்ம வைரல் வீடியோ
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பிற ரோல்களில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாண்டார். கிரண் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். பீஸ்ட் படம் ரசிகர்களிடம் கனிசமான வரவேற்பையும், கலவையான விமர்சனங்களையும் பெற்று ஓடி வருகிறது.
பீஸ்ட் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படம் விஜய் படங்களில் குறிப்பாக தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாகியது.
இந்நிலையில் பீஸ்ட் படக்குழுவுக்கு விஜய் விருந்து வைத்துள்ளார். இது குறித்த போட்டோவை வெளியிட்டு இயக்குனர் நெல்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "எங்களுக்காக விருந்து வைத்ததற்கு நன்றி விஜய் சார். முழு பீஸ்ட் குழுவுடன் வேடிக்கை நிறைந்த மற்றும் மறக்கமுடியாத மாலை.
விஜய் சாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் உடன் பணியாற்ற வசீகரமாக இருந்தது. நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன் & இந்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் நான் மதிக்கிறேன். உங்களின் கவர்ச்சியும், சூப்பர் ஸ்டார்டமும் இந்தப் படத்தை முழுவதுமாக மக்களிடம் கொண்டு சென்றுள்ளது விஜய் சார்.
சன் பிக்சர்ஸ், திரு. கலாநிதி மாறன், திருமதி. காவ்யா மாறன் ஆகியோருக்கு, இந்த மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுத்ததற்கும், இந்தப் படத்தை ஒன்றிணைத்ததற்கும் நன்றி.
எங்களின் அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினர் இல்லாமல் இவை அனைத்தும் சாத்தியமில்லை. தடைகளைத் தகர்த்தெறிந்து அன்பையும் ஆதரவையும் பொழிந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல நீங்கள் அனைவரும் விஜய் சார் மற்றும் ஒட்டுமொத்த டீமுடன் நின்று இந்தப் படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்திருக்கிறீர்கள். சியர்ஸ்!" என குறிப்பிட்டுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8