தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் இன்றைய ஷூட்!!!.. நாயகி பூஜா ஹெக்டேவின் கலக்கல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் திரைப்படம் தளபதி விஜயின் 65 வது படம். 

நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார், இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படத்தை இயக்கினார்.

அனிருத் இசையில் உருவான இந்த திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதனிடையே நெல்சன் திலீப்குமார், தளபதி விஜயின் 65வது படத்தை இயக்கத் தொடங்கினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

பூஜா ஹெக்டே இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படத்துக்கு ஜானி மாஸ்டர் நடனப் பயிற்சி அளிக்கிறார். 

பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஜார்ஜியா என நடந்து வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே ரெடி ஆகும் ஃபோட்டோ வைரலாகி வருகிறது.

முன்னதாக தளபதி65 படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டூடியோஸில் நடந்தபோது தளபதி விஜய் மற்றும் கிரிக்கெட் வீரர் தல தோனி சந்தித்துக் கொண்டனர். 

இதேபோல், தளபதி விஜய் அடுத்ததாக இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி66 திரைப்படத்தில் நடிக்கும் தகவலும் ஏற்கனவே உறுதிப்படுத்தப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: நடிகர் விவேக்-ஐ வைத்து இப்படி ஒரு Plan இருந்ததா? பிரபல ஓடிடி நிகழ்ச்சியை பார்த்ததும் உண்மையை உடைத்த கவுதம் மேனன்.. உருக்கமான பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Thalapathy65 Beast Pooja Hegde shoot update பீஸ்ட்

People looking for online information on Beast, Nelson Dilipkumar, Pooja Hegde, Thalapathy65, Vijay will find this news story useful.