THALAPATHY66: விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் இணைந்த பிரபல முன்னணி தமிழ் நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐத்ராபாத்: விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Vijay Thalapathy 66 Movie Latest Cast Update from Producer
Advertising
>
Advertising

Also Read | DON: படத்தின் வெளிநாட்டு உரிமம்.. வெளியான செம தகவல்கள்.. மாஸ் காட்டிய சிவகார்த்திக்கேயன்!

தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vijay Thalapathy 66 Movie Latest Cast Update from Producer

சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து சரத்குமார் நடிக்க உள்ளார். இவர்கள் போக நடிகர் பிரபு, ஷ்யாம், ஜெய சுதா, பிரகாஷ் ராஜ், யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று வந்த புதிய அறிவிப்பில், நடிகை சங்கீதாவும் இந்த படக்குழுவில் இணைய உள்ளார். மேலும் 120 படங்களுக்கு மேல் நடித்து ஆந்திர அரசின் நந்தி விருது பெற்ற நடிகர் ஸ்ரீகாந்ததும் இந்த படக்குழுவில் இணைந்துள்ளார்.  இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் இணைந்துள்ளார். விஜய்யின் பைரவா படத்தின் எடிட்டரும் இவர் தான். வமசியின் சில படங்களில் எடிட்டராகவும் பணியாற்றி உள்ளார். இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து கதை, திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய உள்ளார்

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

THALAPATHY66: விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் இணைந்த பிரபல முன்னணி தமிழ் நடிகை! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Thalapathy 66 Movie Latest Cast Update from Producer

People looking for online information on Thalapathy 66, Thalapathy 66 Movie Latest Updates, Vijay will find this news story useful.