வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல்.. நடன இயக்குனர் கொடுத்த EXCLUSIVE அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வாரிசு' படத்தின் சிங்கிள் பாடல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | வெளியான 'யானை' படத்தின் செம சண்டைக் காட்சி.. சிங்கிள் ஷாட்ல அருண் விஜய் மாஸ் பண்ணிருக்கார்!

விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜுவின் தயாரிப்பில் வாரசுடு/வாரிசு படம் உருவாகி வருகிறது. 'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர்.

இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

இந்த படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 3 போஸ்டர்கள் வெளியாகின.

வாரிசு படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில்  04.07.2022 அன்று முதல் துவங்கியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜூலை 25 வரை இந்த படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நடக்கும் என்றும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாரிசு படத்திற்கு நடன இயக்குனர்களாக ஷோபி & ராஜூ சுந்தரம் பணிபுரிகின்றனர். இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான தகவலை ஷோபி மாஸ்டர் பகிர்ந்துள்ளார். அதில், வாரிசு படத்தின் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றும், இன்னொரு பாடல் காட்சிக்கான முன் காட்சி எடுக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். எந்த பாடல்கள் என்று தற்போது வெளியில் சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.

Also Read | பா. ரஞ்சித் இயக்கும் புதிய காதல் திரைப்படம்.. வெளியான வண்ணமயமான FIRST LOOK போஸ்டர்!

வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல்.. நடன இயக்குனர் கொடுத்த EXCLUSIVE அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Starring Varisu Movie First Single Song Exclusive update

People looking for online information on Thalapathy Vijay, Thalapathy Vijay Varisu, Varisu Movie, Varisu Movie First Single Song will find this news story useful.