பீஸ்ட் முன்பதிவு டிக்கெட் வசூல் இத்தனை கோடியா? கேரளா, கர்நாடகா, தமிழ் நாடு வசூல் விவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

Advertising
>
Advertising

பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.

பீஸ்ட் சண்டைக்காட்சி படப்பிடிப்புக்கு டில்டா ரிக்கை பயன்படுத்தியதாகவும், ரெட் நிறுவன கொமோடோ கேமராக்களுக்கு இந்த ரிக் சிறப்பாக இருப்பதாகவும்,பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு ரெட் நிறுவனத்தின் புதிய வரவான RED RAPTOR வகை கேமராவை இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்தியதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார். இந்த ரெட் ராப்டர் வகை கேமராவின் சிறப்பம்சமாக Slow Motion வீடியோக்களை துல்லியமாக 8K Resolution கொண்டு எடுக்கலாம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்றது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டது.  பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

மேலும் பீஸ்ட் படத்தின் சிங்கப்பூர், வளைகுடா நாடுகளின் வெளியீட்டு உரிமையை வலிமை பட வினியோகஸ்தரான Home Screen பொழுதுபோக்கு நிறுவனம் கைப்பற்றி உள்ளது. பீஸ்ட் படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை  ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளனர். 

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முன்பதிவு டிக்கெட் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு - 17.25 கோடி, கர்நாடகா - 5.75 கோடி, கேரளா - 4.2+ கோடி, ஆக மொத்தம் 3 மாநிலங்களில் இருந்து மொத்தம் 27+ கோடிகள் வசூலிக்கப்பட்டுள்ளது என ந்ம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Starring Beast ticket Pre sales box office collections

People looking for online information on Beast, Beast Box Office, Beast Box Office Collection, Nelson, Vijay will find this news story useful.