சென்னை: விஜய் நடிப்பில் உருவாகும் 'பீஸ்ட்' படத்தின் புதிய அப்டேட் இன்று (07.02.2022) மாலை 6 மணிக்கு வெளியாகி உள்ளது.

கீர்த்தி சுரேஷ் கேரக்டர் பெயரில் COLORFUL பாடல்! மாஸ் ஹீரோவுடன் நடிக்கும் படத்தின் வேற லெவல் UPDATE!
இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர். பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக டீம் 100 நாட்கள் படப்பிடிப்பை முடித்ததாக பிரத்யேக BTS புகைப்படத்தை வெளியிட்டு இயக்குனர் நெல்சன் தெரிவித்திருந்தார். நடிகர் விஜய், பூஜா ஹெக்டே தான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துள்ளனர். மேலும் புத்தாண்டையொட்டியும், குடியர்சு தினவிழாவை ஒட்டியும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அச்சமயத்தில் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் "அரபி குத்து" வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள் காதலர் தினத்தை ஒட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் அரபி மொழியில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். இது பற்றிய அறிவிப்பில் டாக்டர் படம் செல்லம்மா பாடல் ப்ரோமோ போல இந்த பாட்டிற்கும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்த ப்ரோமோ வீடியோவில் சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் ஆகியோருடன் மற்றும் விஜய்யின் குரலும் இடம்பெற்றுள்ளது.
"ஆளுநரின் செயல் தமிழக மக்களுக்கு எதிரானது" - நீட் விவகாரத்தில் கொந்தளித்த பா. ரஞ்சித்