தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் பீஸ்ட்.
மீண்டும் சினிமாவில் நடிக்கிறாரா கேப்டன் விஜயகாந்த்? இயக்குனர் விஜய் மில்டன் விளக்கம்
பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியானது.
பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
மேலும் பீஸ்ட் படத்தின் சிங்கப்பூர், வளைகுடா நாடுகளின் வெளியீட்டு உரிமையை வலிமை பட வினியோகஸ்தரான Home Screen பொழுதுபோக்கு நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் படம் வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டது. சென்சார் போர்டில் குவைத் நாட்டின் தகவல் துறை அமைச்சக அதிகாரிகள் அங்கம் வகிப்பர்.
குவைத் நாட்டில் அந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள், வெளியுறவு கொள்கைக்கு மற்றும் அண்டை நாடுகளுடன் நல்லுறவுக்கு எதிரான படங்கள், குறிப்பாக வளைகுடா நாடுகளில் வில்லன்கள் இருப்பது, தீய செயல்களை வளைகுடா நாடுகளில் செய்வது போன்ற காட்சிகள் இருந்தால் குவைத் நாட்டில் அந்த படம் தடை செய்யப்படும் என்பது விதியாக உள்ளது.
இச்சூழலில் பீஸ்ட் படத்தில் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதாக கருதப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் துல்கர் சல்மான் நடித்த குரூப், விஷ்ணு விஷால் நடித்த FIR படங்கள் தடை செய்யப்பட்டன. இந்த படங்களின் வரிசையில் பீஸ்ட் படமும் இணைந்துள்ளது.
ஆனால் வளைகுடா நாடுகளான யுஏஇ, சவுதி அரேபியா, கத்தார், ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் படத்தை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
KGF உம் வேணும்.. BEAST - உம் வேணும்! இரண்டு படங்களையும் ரிலீஸ் செய்யும் பிரபல வினியோகஸ்தர்!