VIDEO: "குழி பறிக்குறவங்க மேல நமக்கு கோவம் வரும்.. ஆனால்..." - விவேக் பற்றி விஜய்.. THROWBACK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விவேக் மறைவு தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

எனினும் விவேக் பல்வேறு வேளைகளில் தொடர்ந்த பல கட்ட விழிப்புணர்வு செயல்களை பற்றி பலரும் இப்போது பேசி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்பட விழாவில் தளபதி விஜய், விவேக் பற்றி பகிர்ந்த தகவல்கள் இப்போது வீடியோவாக ரசிகர்களிடத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

அந்த வீடியோவில் பேசிய விஜய், “பொதுவாகவே குழி பறிக்கும் வேலையை ஒருவர் செய்தால் அவர் மீது நமக்கு கோபம் தான் வரும். ஆனால் இவர் குழி பறிக்கும் வேலையை செய்யும்போது மட்டும் அவர் மீது மரியாதையே வரும். விவேக் அவர்களின் மரம் நடும் முன்னெடுப்பை பற்றி தான் நான் சொல்கிறேன். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக் கூடிய காமெடிகளை செய்தவர் இப்போது செயலில் இறங்கியுள்ளது மட்டுமல்லாமல் நம்மை செயல்படவும் வைத்திருக்கிறார்” என விஜய் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விஜய் முன்னொரு வேளையில் தமது வீட்டினுள் கன்றுகளை நட்டுக்கொண்டிருந்த புகைப்படங்கள் மீண்டும் வைரலாகி வருகின்றன.

ALSO READ: விவேக் நினைவாக இளம் ஹீரோயினின் நெகிழ்ச்சி காரியம்.. தளபதி ரசிகர் பகிர்ந்த புகைப்படம்!

Tags : Vivekh, Bigil, Vijay

தொடர்புடைய இணைப்புகள்

Vijay speech about vivek Bigil launch throwback video

People looking for online information on Bigil, Vijay, Vivekh will find this news story useful.