தளபதி விஜய் மகன் சோசியல் மீடியால இருக்காரா? வெளியான OFFICIAL தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் சமூக வலைத்தள‌ பக்கங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது'.. கவுண்டவுனுடன் வெளியான ரொமான்டிக் போஸ்டர்!

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய். இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.

Beast படத்திற்கு பிறகு வாரிசு படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே அகமது தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அன்புள்ள அனைவருக்கும், தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை என்பதை தெரிவிக்கவே இது! எனவே, போலி கணக்குகளை ஊக்குவிக்கவோ/வெளியிடவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி!" என‌ ரியாஸ் கே அகமது கூறியுள்ளார்.

 

Also Read | இந்தி நடிகர் ஷாருக்கானை சந்தித்தாரா தளபதி விஜய்? விஜய் தரப்பு சொன்ன அதிகாரப்பூர்வ தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Son Jason Sanjay Social Media fake Account clarification from Pro Riaz K Ahmed

People looking for online information on Fake account, Riaz K Ahmed, Social Media, Varisu, Vijay, Vijay Son, Vijay Son Jason Sanjay will find this news story useful.