இந்தி நடிகர் ஷாருக்கானை சந்தித்தாரா தளபதி விஜய்? விஜய் தரப்பு சொன்ன அதிகாரப்பூர்வ தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிகர் ஷாருக்கானை சந்தித்தாரா? என்பது குறித்து விஜய் தரப்பு  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | PS1 பொன்னியின் செல்வன் படத்தின் இதுவரை காணாத BTS.. கூட யாரெல்லாம் இருக்காங்கனு பாருங்க!

தமிழில் ராஜாரானி, மெர்சல், பிகில், தெறி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. விஜய் நடிப்பில் 'பிகில்' படம் தயாரான பொழுதே ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க ஒப்பந்தமானார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிலநாட்களுக்கு முன் வெளியானது.

அட்லி (Atlee) இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது.

இப்படத்திற்கு 'ஜவான்' 'Jawan' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் & டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடிக்கிறார். நடிகை பிரியாமணி (Priyamani) ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

இந்த படம் பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 2023 ஜூன் மாதம் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய், ஷாருக்கானை சந்தித்தார் என கூறி சமூக வலைத்தளங்களில் விஜய்யுடன் ஷாருக்கான் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டு வந்தது.

இந்த புகைப்படம் குறித்து விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே அகமது தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் கொடுத்துள்ளார். "ஜவான் பிகிலை சந்தித்தார்" என ஒரு ரசிகரின் பதிவை பகிர்ந்து "உண்மையில்லை" என ரியாஸ் அகமது ட்வீட் செய்துள்ளார்.

இதன் மூலம் விஜய், ஷாருக்கான் சந்திப்பு நடைபெறவில்லை என்பது உறுதியாகிறது.

 

Also Read | பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது'.. கவுண்டவுனுடன் வெளியான ரொமான்டிக் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sharukh Khan meeting clarification from Pro Riaz K Ahmed

People looking for online information on Atlee, Riaz K Ahmed, Shah Rukh Khan, Varisu, Vijay will find this news story useful.