VIDEO: அனபெல் சேதுபதி ஸ்கிரிப்ட்ல விஜய் சேதுபதியின் தலையீடு இருந்துச்சா? இயக்குனரின் பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனபெல் சேதுபதி படத்தின் இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன், இவர் இயக்குனர்-நடிகர் ஆர். சுந்தர்ராஜனின் மகனாவார். இயக்குனர் A.L. விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், தீபக் சுந்தர்ராஜன்.

இவர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, டாப்ஸி பானு நடித்துள்ள 'அனபெல் சேதுபதி' படத்தின் முதல் லுக் போஸ்டர், டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸியுடன் ஜெகபதி பாபு மற்றும் நடிகை ராதிகா சரத்குமார், யோகிபாபு, தேவ தர்ஷினி, சுப்பு பஞ்சு ஆகியோரும் நடித்துள்ளனர்.

காமெடி பேண்டஸி வகைமையில் இந்த படம் உருவாகி உள்ளது. இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் கதை நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. சேதுபதி மன்னராக விஜய் சேதுபதி இதில் நடித்துள்ளார், சேதுபதியின் காதலியாக அனபெல் கதாபாத்திரத்தில் நடிகை டாப்ஸி நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபியில் ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன், மற்றும் இவரது தந்தை இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அதில் கேட்கப்பட்ட படம் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தனர். அனபெல் சேதுபதி ஸ்கிரிப்ட்ல விஜய் சேதுபதியின் தலையீடு இருந்துச்சா? என்ற கேள்விக்கு படத்தின் கதாபாத்திரப்பெயரே வீர சேதுபதி தான். அதனால் படத்தின் தலைப்பு அனபெல் சேதுபதி என்று வைக்கப்பட்டது என்று இயக்குனர் பதில் கூறினார். இன்னும் பல கேள்விக்கு இயக்குனரின் பதில் கீழே உள்ள வீடியோவில் உள்ளது.

VIDEO: அனபெல் சேதுபதி ஸ்கிரிப்ட்ல விஜய் சேதுபதியின் தலையீடு இருந்துச்சா? இயக்குனரின் பதில்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethyupathi tapsee annabelle sethupathi press meet

People looking for online information on Tapsee pannu, Vijay Sethupathi will find this news story useful.