நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகன் சூர்யா சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘சிந்துபாத்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியாகியுள்ளது.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சிந்துபாத்’ திரைப்படத்தை கே புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் நடித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதியும், சூர்யா சேதுபதியும் இணைந்து அசால்ட்டாக ஆட்டய போடும் பெட்டி கேஸ் திருடர்களாக நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு குறிப்பிட்ட டெசிபல் அளவில் மட்டுமே காது கேட்கும், அதனால் நடக்கும் சுவாரஸ்யங்களும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றியும் இப்படத்தில் பேசப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இப்படம் வரும் ஜூன்.21ம் தேதி ரிலீசாகிறது. விஜய் சேதுபதியின் இந்த புதிய பரிமாணம் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.