நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகன் சூர்யா சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘சிந்துபாத்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘சிந்துபாத்’ திரைப்படத்தை கே புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். மேலும், முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் நடித்திருந்தார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் கடந்த ஜூன்.27ம் தேதி ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியும், சூர்யா சேதுபதியும் இணைந்து அசால்ட்டாக ஆட்டய போடும் பெட்டி கேஸ் திருடர்களாக நடித்து அசத்தியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவில், திருடிய கம்பெனியிலேயே செக்கியூரிட்டி வேலைக்கு விஜய் சேதுபதி விண்ணப்பிக்கிறார்.