விஜய் சேதுபதி படம் குறித்து வந்த தவறான தகவல்.. நடிகர் கொடுத்த அதிரடி விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதியின் படம் குறித்து வந்த தவறான தகவலையடுத்து, அவர் விளக்கம் கொடுத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது விஜய்யின் மாஸ்டரில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இவர் லாபம், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார். 

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம் குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இத்திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியா போவதாக அண்மையில் செய்திகள் வந்தன. 

இதனிடையே தற்போது விஜய் சேதுபதி அதற்கு மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''சமூக அரசியல் சார்ந்த த்ரில்லர் படமான லாபம், ஓ.டி.டி-யில் வெளியாகாது. அது நேரடியாக தியேட்டரிகளில் பெரிதாக ரிலீஸ் செய்யப்படும்'' என அவர் தெரிவித்தார். 

விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வரலாம் எனவும் ரசிகர்களிடையே எதிர்ப்பார்க்கப்படுகிறது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ள இப்படத்தில் ஷ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் சேதுபதி பட ரிலீஸ் தகவல் | vijay sethupathi's laabam movie release clarification

People looking for online information on LAABAM, S P Jananathan, Vijay Sethupathi will find this news story useful.