'லோகேஷ்' படத்தின் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி.. யாருடைய கேரக்டர் தெரியுமா? VIRAL ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2017 ஆம் வருடம் வெளியான திரைப்படம் மாநகரம்.

Vijay sethupathi Viral pic in Lokesh Movies hindi remake

சந்தீப் கிஷான், ஸ்ரீ, முனீஸ்காந்த், சார்லி உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நன்மதிப்பைப் பெற்றார். இந்த நிலையில் இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

Vijay sethupathi Viral pic in Lokesh Movies hindi remake

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்த திரைப்படத்தை பாலிவுட்டில் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருந்து தெரிகிறது.

அந்த புகைப்படத்தில் விஜய் சேதுபதி கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு சிறுவன் ஒருவனுடன் நிற்கிறார். இதை வைத்து பார்க்கும்போது மாநகரம் படத்தில் முனீஸ்காந்த் நடித்த அதே கதாபாத்திரத்தில் தான் விஜய் சேதுபதி மும்பைகார் என்கிற இந்த திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது தெரியவருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம், கைதி படங்களுக்குப் பிறகு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் மாநகரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி முனீஸ்காந்த்தின் வேடத்தை ஏற்று நடிப்பது என்பது இன்னும் புதிய வித எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

இதனிடையே லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட படங்களிலும் விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார். அந்தப் படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

ALSO READ: 'விஜய் சேதுபதி' பட நடிகர் காலமானார்.. இயக்குநர் பதிவிட்ட உருக்கமான ட்வீட்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi Viral pic in Lokesh Movies hindi remake

People looking for online information on Maanagaram, Master Tamil, Mumbaikar, Munish Kanth, Santhosh Sivan, Vijay Sethupathi will find this news story useful.