VIDEO: விஜய் சேதுபதியின்.. 'மரண மாஸ்' குத்தாட்டம்'.. வெறித்தனமான டான்ஸ் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டி.வி-யில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவிருக்கும் புதிய சமையல் நிகழ்ச்சி 'மாஸ்டர் செஃப்'.

vijay sethupathi viral dance video trending master chef

இந்த நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் அடுத்தடுத்து 'சன் டி.வி-யில்' வெளியாகி மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆகி வந்தது. இந்த புரோமோ நிகழ்ச்சிகளில் தோன்றிய நடிகர் விஜய் சேதுபதி, “இது மாஸ்டர் செஃப் நம்முடைய மக்களின் டக்கர் சமையல்!” என்று அறிமுகம் கொடுத்ததுடன், இந்த நிகழ்ச்சியை தான், தொகுத்து வழங்க இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

vijay sethupathi viral dance video trending master chef

'பீட்சா', 'சூது கவ்வும்' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்வு செய்து. நடிக்க கூடிய வித்தியாசமான நடிகராக அறிமுகமான விஜய் சேதுபதி, பின்னாட்களில் மாஸ் ஹீரோவாகவும், முன்னணி நடிகராகவும் மலர்ந்தார்.

vijay sethupathi viral dance video trending master chef

அண்மையில் 'தளபதி' விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் வில்லனாகவும் தோன்றி, மெர்சல் காட்டினார் விஜய் சேதுபதி. தற்போது 'கமல்ஹாசன்' நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் இந்த சூழலில், விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்தான் சன்.டி.வியின் பிரபல சமையல், நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் தமிழ் - இந்தியா நிகழ்ச்சியை, விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது தொடர்பான அப்டேட்கள் நாளும் நாளும் டிரெண்ட் ஆகி வருகின்றன. அந்த வகையில் விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப் ஷூட்டிங் தளத்தில் போடும் மரண மாஸ் குத்தாட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக விஜய்சேதுபதி, தமது இன்ஸ்டாகிராமில், இந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட செம மாஸான புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் 'சால்ட் அண்ட் பெப்பர்' லுக்கில் விஜய் சேதுபதி, மேல்நோக்கி சிரிக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

இதே நிகழ்ச்சியின் தெலுங்கு வெர்ஷனை, தமன்னா தொகுத்து வழங்குவதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதியும், தமன்னாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் கடந்த வாரம் இணையத்தில் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: "ஆர்யா" நடித்த 'இந்த' திரைப்படம் .. பிரபல ஓடிடியில் வெளியாகிறதா? .. பரபரப்பு தகவல்!

VIDEO: விஜய் சேதுபதியின்.. 'மரண மாஸ்' குத்தாட்டம்'.. வெறித்தனமான டான்ஸ் வீடியோ! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi viral dance video trending master chef

People looking for online information on Dance, MasterChefTamil, SunTV, Trending, Vijaysethupathi, Vijaysethupathy Masterchef, Viral, VJS will find this news story useful.