விஜய் சேதுபதி.. வெற்றிமாறன் & சமூக ஆர்வலர்கள் ஸ்டாலினிடம் முன்வைத்த 14 கோரிக்கைகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.

இந்த நிலையில் பலரும் மு.க.ஸ்டாலினுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கலைஞர் மு.கருணாநிதியின் மகனும் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான மு.க.ஸ்டாலின் 50 ஆண்டுகால அரசியலில் அனுபவம் வாய்ந்தவர்.

இந்த நிலையில் அவருக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் ஒன்றினை சுற்றுச்சூழல் பிரபலங்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் கடிதம் எழுதியுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன், நீதியரசர் (ஓ) ஹரிபரந்தாமன், பேரா வசந்தி தேவி உள்ளிட்ட 67 நபர்கள் சூழலியல் நீதிக்கான 14 அம்ச கோரிக்கைகளை ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

இந்தக் கடிதத்தில் வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக்கூடாது, எட்டு வழி சாலை திட்டத்திற்கு அனுமதி தரப்படக்கூடாது, கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு இருக்கிற கூடுதலான 4 அணு உலை செயல்பாடுகள் நிறுத்தப்படவேண்டும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும், இந்துஸ்தான் யூனி லீவரின் பாதரச கழிவுகளை கொடைக்கானல் தொழிற்சாலை பகுதி சர்வதேச தர நிலைகளை பின்பற்றி தூய்மைப்படுத்துதல், மரபணு மாற்றுவிதைகளுக்கு அனுமதி மறுத்தல், நிலத்தடி நீரின் வணிகரீதியான பயன்பாட்டை கட்டுப்படுத்துதல், நகரத்தின் சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளை சரிசெய்தல், ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவித்தல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரிடர்களை கணித்து தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தல், டெல்டாவில் ஹைட்ரோகார்பன் சுரண்டலுக்கு எதிரான நடவடிக்கையை ஊக்கப்படுத்துதல், தமிழகத்தின் ஆறுகளுக்கு பாதுகாப்பு அளித்தல், டெல்டா மக்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான பொருளாதார திட்டங்களை நிறுவதல், புவிவெப்பமடைதலுக்கு காரணமான நிலக்கரி அனல்மின் திட்டங்களை கைவிடுதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை தொடருதல், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை திட்டங்கள் தொடர்பான சுற்றுச்சூழல் ஆலோசனையை வலுப்படுத்துதல் உள்ளிட்டவற்றை கோரிக்கைகளாக முன் வைத்திருக்கின்றனர்.

மேலும் சூழலியல் நீதிக்கான அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நிலையிலும், சிவில் சமூகத்தின் உறுப்பினர்களாகவும் தங்களுடைய கண்காணிப்பு பணிகள் தொடரும் என்று அந்த கடிதத்தில் இந்த நபர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

ALSO READ: "நீதிக்காக அயராது போராடியவர்!".. டிராபிக் ராமசாமி மறைவு குறித்து கமல்ஹாசன் உருக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi vetrimaaran and activists request to MK Stalin

People looking for online information on Vetrimaaran, Vijay Sethupathi will find this news story useful.