சன்.டிவியில் மாஸ்டர் செஃப் தமிழ்-இந்தியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள விஜய் சேதுபதி, இது தொடர்பான பிரஸ் மீட்டில் அவர் ஆங்கிலத்தில் பதில் அளித்ததுடன், கன்னட திரைப்படத்தில் நடித்த த்ரோபேக் அனுபவங்களை குறித்தும் பேசியுள்ளார்.
முன்னதாக தன் வாழ்க்கையில் இருக்கும் மிகப்பெரிய மாஸ்டர் செஃப் எப்போதுமே தன் அம்மா தான் என்று விஜய் சேதுபதி கூறினார்.
இதனிடையே, 20 வருடம் முன்பு தான் ஒரு ஃப்ராடு தனம் செய்ததாக கூறிய விஜய் சேதுபதி, இதுபற்றி கூறும்போது, “அந்த சமயம், நான் கல்லூரி படிக்கும்போது பெங்களூரில் உள்ள மைசூர் பேலஸ், பார்க், இந்தி படம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு சென்றுவிட்டேன்.
அதன் பிறகு 10 வருடங்களுக்கு பிறகு ஒரு கன்னட படத்தில் வில்லனாக நடித்தேன். அப்போது மத்திக்கரையில் தங்கியிருந்தேன். அந்த படத்தில் கன்னட மொழியே தெரியாது. ஆனால், 3 மாதங்கள் கன்னட மொழியில் அந்த வசனம் பேச என்னை தயார் செய்துகொண்டிருந்தேன். (அந்த கன்னட வசனத்தை பேசி கலகலப்பூட்டினார்)
பின்னர் சென்னை திரும்பினேன். கன்னடத்தில் நடிக்கத் தொடங்கிய பிறகு ஒருவருக்கு நல்ல பெரிய ஆளாக ஆகக்கூடிய வாய்ப்புள்ளதாக அந்த மேனேஜர் சொன்னார். எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு அவர் இதயத்தில் இருந்து வந்த அந்த வார்த்தைகள் முக்கியம். மீண்டும் பல வருடம் கழித்தும் என்னிடம் அவர் அதையே சொன்னார்." என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், தனது கல்லூரி நாட்களில் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடையில் மாதத்திற்கு ரூ.750 சம்பளத்துக்காக பணிபுரிந்ததாகவும், இரவு 7.30 முதல் இரவு 12.30 மணி வரை அங்கு வேலை செய்ததாகவும் குறிப்பிட்ட விஜய் சேதுபதி 3, 4 மாதங்கள் டெலிபோன் பூத்தில் வேலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழில் நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி, வெளியாகவிருக்கும் இந்த நிகழ்ச்சியை தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்குகிறார்.