விஜய் சேதுபதி.. தமன்னா பங்குபெறும் பிரம்மாண்ட டிவி நிகழ்ச்சி.. வைரல் ப்ரோமோ ஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இப்போதெல்லாம் சமையல் நிகழ்ச்சிகளே சின்னத்திரை தொலைக்காட்சிகளில் அதிகம் கவரப்படுகின்றன. அந்த வகையில் வழக்கமான சமையல் நிகழ்ச்சிகளின் போக்கு இன்று மிகப்பெரிய அளவில் மாறியிருக்கிறது

சமையல் நிகழ்ச்சிகளில் புதுமைகளை புகுத்தி அனைவராலும் விரும்பத்தக்க பொழுதுபோக்கு அம்சமாக அதை மாற்றி தருவதில் இந்த நிகழ்ச்சிகள் தற்போது முன்னிலை வகிப்பதுடன் அவை வெற்றியும் அடைகின்றன. அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் மாபெரும் நிகழ்ச்சியாக வரவிருக்கிறது மாஸ்டர் செஃப் தமிழ் இந்தியா என்னும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி.

தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் மற்றும் எதார்த்தம் என்று இரண்டு வகையான திரைப்படங்களிலும் நடித்து மக்கள் செல்வன் என்கிற அங்கீகாரத்தை மக்களிடையே பெற்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்தான ப்ரோமோக்கள் அடுத்தடுத்து சன் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டன.

முன்னதாக மாஸாக ஹெலிகாப்டரில் வந்து இறங்கி மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியை பற்றி அறிமுகம் கொடுத்தார் விஜய் சேதுபதி. அடுத்தடுத்த ப்ரோமோக்களில் இது நம்ம ஊர் டக்கர் சமையல் என்றும், இந்நிகழ்ச்சியை தாம் தொகுத்து வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதியுடன் தமன்னா பங்குபெறும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆம், இதே நிகழ்ச்சியின் தெலுங்கு வெர்ஷனுக்காக விஜய் சேதுபதியுடன் கலந்துகொண்டு நடித்துள்ளதாக குறிப்பிட்டு தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை தமன்னா. இந்த நிகழ்ச்சி விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை தமன்னாவை கடைசியாக ஹாட் ஸ்டாரில் வெளியான த்ரில்லர் வெப் சீரிஸான 'நவம்பர் ஸ்டோரி' தொடரிலும், விஜய் சேதுபதியை விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் பார்த்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: "ஹேமாவை மீட்கும் கண்ணம்மா"!.. ரவுடிகளுடன் மோதும் 'சிங்கப்பெண்கள்'! தெறிக்கும் ARR குரல்!.. மாஸ் Promo!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi Tamannaah viral promo shoot Master chef

People looking for online information on Tamannaah Bhatia, Vijay Sethupathi will find this news story useful.