தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.
1996ஆம் ஆண்டு முதல் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து வந்தவர் விஜய் சேதுபதி, லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, புதுப்பேட்டை, எம். குமரன் S/o மகாலெட்சுமி, லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா ஆகிய படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக கவனிக்க தக்க வகையில் நடித்திருப்பார்.
பின் தென்மேற்கு பருவக்காற்று, பீட்ஸா, சூது கவ்வும், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அவ்வப்போது கேமியோ, வில்லன் ரோல்களிலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் , காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன் ஆகிய படங்கள் வெளியானது. நேற்று விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் DSP திரைப்படம் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி நடித்து இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர், விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பல சம்பவங்களை மனம் திறந்துள்ளார். குறிப்பாக, "நடிகர் அஜித்துடன் வில்லனாக நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது. முதன்முதலில் நடிகர் அஜித்துடன் தான் வில்லனாக நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு பேச்சுவார்த்தை நிகழாமல் போனதால் நடிகர் அஜித்துடன் வில்லனாக நடிக்க முடியாமல் போய்விட்டது" என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.