VIJAY SETHUPATHI: முதல்வரின் 65 நாள் ஆட்சி எப்படி..? ‘சட்டென போட்டு உடைத்த’ தெறி பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றார்.

vijay sethupathi opens about 65 days tn cm stalin ruling

சுமார் இரண்டு மாதங்களை மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி  கடந்துள்ள நிலையில் இது குறித்து நடிகர் விஜய் சேதுபதியிடம் நிரூபர் ஒருவர் கேட்டுள்ளார்.  அதாவது, “மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று சுமார் 65 நாட்கள் ஆன நிலையில் அவரது ஆட்சியை எப்படி பார்க்கிறீங்க?” என கேட்கப்பட்டது.

vijay sethupathi opens about 65 days tn cm stalin ruling

இதற்கு பதில் அளித்துள்ள விஜய் சேதுபதி, ஸ்டாலினின் ஆட்சி தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் அவரை நேரில் சந்தித்து பேசும்போது கூட முதல்வரின் ஆட்சி குறித்து, “சார், ரொம்ப நல்லா ஆட்சி பண்ணிட்டு இருக்கீங்க” என்று சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.



இப்படி, தான் மட்டுமில்லாது, தன்னுடன் பணிபுரிபவர்கள், டிரைவர், அசிஸ்டென்ட் என யாருமே இதுவரை ஸ்டாலினுடைய ஆட்சியை பற்றி குறை சொல்லவில்லை என்றும், இப்படி குறை சொல்லாத ஆட்சியை ஸ்டாலின் தந்துகொண்டிருப்பதாகவும் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

சன்.டி.வியில் ஒளிபரப்பாகவுள்ள மாஸ்டர் செஃப் சமையல் நிகழ்ச்சியினை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள நிலையில், அதற்கான படப்பிடிப்பில் அவர் படு பிஸியாக இருக்கிறார். இதே நிகழ்ச்சியின் தெலுங்கு வெர்ஷனை நடிகை தமன்னா தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: விஜய் சேதுபதியின் வேற லெவல் லுக்!!.. அறிமுகமான செஃப்கள்! மாஸ்டர் செஃப் Promo

VIJAY SETHUPATHI: முதல்வரின் 65 நாள் ஆட்சி எப்படி..? ‘சட்டென போட்டு உடைத்த’ தெறி பதில்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi opens about 65 days tn cm stalin ruling

People looking for online information on DMK, MasterChef, MasterChefTamil, MKStalin, SunTV, Vijay Sethupathi will find this news story useful.