VIDEO: RECEPTION-ல் குத்து டான்ஸ் .. மாஸ் காட்டிய விஜய் சேதுபதி.. இந்த CELEBRITY-க்கு கல்யாண வயசுல பொண்ணா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகராகவும் குரல் கலைஞராகவும் அறியப்படுபவர் எம்.எஸ்.பாஸ்கர். 

சன் டி.வி.யில் ஆரம்ப காலத்தில் ஒளிபரப்பான தொடர் ஒன்றில் பட்டாபி என்கிற முக்கிய கதாபாத்திரத்தின் வழியாக வந்த எம்.எஸ்.பாஸ்கர் பிற்காலத்தில் திரைத் துறையில் மிக முக்கியமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் ஆனார். அண்மையில் வெளியான 8 தோட்டாக்கள் திரைப்படத்தில் வில்லனாகவும் மிரட்டியிருக்கிறார். நடிப்பு திறமை கொண்ட எம்.எஸ்.பாஸ்கர் இன்னொருபுறம் வளமான குரல் கலைஞராகவும் அறியப்படுபவர். இவருடைய மகன் ஆதித்யா பாஸ்கர்.

விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவான 96 திரைப்படத்தில் குட்டி விஜய் சேதுபதியாக கவனம் ஈர்த்தவர் ஆதித்யா பாஸ்கர். இந்நிலையில் எம்.எஸ்.பாஸ்கரின் வீட்டில்தான் அந்த சிறப்பு விசேஷம். இந்த விசேஷத்தில்தான் விஜய் சேதுபதி கலந்துகொண்டது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

எம்.எஸ்.பாஸ்கருக்கு ஆதித்யா பாஸ்கர் மட்டுமல்லாது ஐஸ்வர்யா பாஸ்கர் என்கிற மகள் உள்ளார். ஐஸ்வர்யா பாஸ்கர் திருமணம் தான் தற்போது எம்.எஸ்.பாஸ்கர் வீட்டில் இப்போதைய விசேஷமான செய்தி. இதில் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரின் திருமண விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ஆதித்யா பாஸ்கருக்கு வணக்கம் சொல்லி மணமக்களை வாழ்த்தி அனைவருடனும் செல்பி எடுத்துக் கொண்ட விஜய் சேதுபதி அங்கு கலகலப்பாக பேசிக்கொண்டிருந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

இந்த விசேஷத்தில் கலந்து கொண்டவர்களும் நண்பர்களும் மணமக்களுடன் இணைந்து டான்ஸ் ஆடிய வீடியோக்கள் வைரல் ஆகியுள்ளன.

ALSO READ: உதயநிதிக்கு இவ்ளோ பெரிய மகனா?'.. நல்லா வளந்துட்டாரே? யாரும் பார்த்திராத வைரல் புகைப்படம்!

VIDEO: RECEPTION-ல் குத்து டான்ஸ் .. மாஸ் காட்டிய விஜய் சேதுபதி.. இந்த CELEBRITY-க்கு கல்யாண வயசுல பொண்ணா! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi MS Baaskar daughter wedding viral dance video

People looking for online information on Aadhitya Baaskar, Iswarya Baaskar, M.S. Baskar, Vijay Sethupathi will find this news story useful.