VIDEO: விஜய் சேதுபதி பட ஷூட்டிங்கில் தள்ளுமுள்ளு.. சற்றுநேரம் நின்ற படப்பிடிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின்போது நடந்த தள்ளுமுள்ளு இணையத்தில் வீடியோவாக வெளியாகி பரவிவ் வருகிறது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கான இந்த படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது படக்குழுவினரில் சிலருக்கும் அங்கு சென்ற பத்திரிகையாளருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானதாகக் கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு சற்று நேரம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சக பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே அங்கு நடிகர் விஜய்சேதுபதி வந்து இரு தரப்பினரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டிருந்தபோது தடுத்து சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார். அதன் பின்னர் காவல்துறையினரின் கவனத்துக்கு இந்த பிரச்சனை சென்றதை அடுத்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

அண்மையில் தான் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் முருகா பாடல் வெளியானது. சிலம்பரசன் பாடியுள்ள இந்த பாடல் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதேபோல் இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 46வது திரைப்படம் உருவாகி வருகிறது. அந்த பட ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது பரவிவருகிறது.

ALSO READ: ‘என்ஜாயி எஞ்சாமி’.. செல்ல மகளின் முதல் பிறந்த நாளுக்கு சீரியல் நடிகை செய்தத பாருங்க! வீடியோ

VIDEO: விஜய் சேதுபதி பட ஷூட்டிங்கில் தள்ளுமுள்ளு.. சற்றுநேரம் நின்ற படப்பிடிப்பு! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi Movie shooting Spot issue Video விஜய் சேதுபதி

People looking for online information on Dindugal, Shooting, Vijay Sethupathi, Viral will find this news story useful.