மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாக பாபுவின் மகள் நிஹரிகா கொனிடேலா. இவர் தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைதன்யா என்பவருடன் இருக்கும் ஃபோட்டோ பகிர்ந்து என்னுடையவர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஃபோட்டோ வைரலாகி வருகிறது. இதனையடுத்து நிஹரிகாவிற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நிஹாரிகா திருமணம் செய்து கொள்ளவிருக்கும் சைதன்யா டெக் மஹிந்திராவில் பணி செய்து வருகிறாராம். இருவருக்கும் வருகிற ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வருட இறுதியில் இவர்களது திருமணம் நடைபெறவிருக்கிறதாம்.
Tags : Niharika Konidela