'விஜய் சேதுபதி' பட நடிகர் காலமானார்.. இயக்குநர் பதிவிட்ட உருக்கமான ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று ரேணிகுண்டா, பில்லா-2 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன்.

Vijay Sethupathi movie actor dies in hospital தீப்பெட்டி கணேசன்

இவர் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

Vijay Sethupathi movie actor dies in hospital தீப்பெட்டி கணேசன்

இந்த தகவலை இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அந்த ட்வீட்டில், “எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்கிற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.

அன்புநிறை இதய அஞ்சலி கணேசா!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தீப்பெட்டி கணேசன் 2010ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி , வசுந்தரா சியேர்ட்ரா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்து வெளியாகிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi movie actor dies in hospital தீப்பெட்டி கணேசன்

People looking for online information on Theepetti Ganesan, THENMERKU PARUVAKATRU, Vijay Sethupathi will find this news story useful.