“நான்தான் உனக்கு அடிமை… புள்ளைங்க இல்ல….” விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ SNEAKPEEK ரிலீஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் அடுத்த ரிலீஸாக மாமனிதன் திரைப்படம் வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

மாமனிதன்…


இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. இந்த படம் பரவலாக நல்ல விமர்சனங்களைப் பெற்றது. தென் மேற்குப் பருவக்காற்று திரைப்படத்துக்குப் பின்னர் இவர்கள் கூட்டணியில் இடம் பொருள் ஏவல், தர்மதுரை மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இதில் இடம்பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கடுத்து அவர்கள் கூட்டணியில் உருவான தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இளையராஜா- யுவன் கூட்டணி…

மாமனிதன் படத்துக்காக இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இருவரும் இணையும் முதல் படமாக மாமனிதன் அமைந்துள்ளது. இந்த கூட்டணிக்காக படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றன. இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளன. இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை ‘தர்மதுரை’  தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் கைப்பற்றியுள்ளார்.  வரும் ஜூன் 24 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

Sneak peek

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ரிலீஸாவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் தற்போது படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்று Sneak peek ஆக வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி தன் மனைவி மற்றும் குழந்தைகளோடு அன்பாக இருக்கும் காட்சிகள் இந்த sneak peek-ல் வெளியாகியுள்ளன.

 

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi maamanithan sneak peek video released

People looking for online information on Ilaiyaraaja, Maamanithan, Seenu ramasamy, Yuvan will find this news story useful.