விஜய் சேதுபதி- கத்ரீனா கைஃப் இணையும் 'மேரி கிறிஸ்துமஸ்'.. வெளியான முழு சூப்பர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணையும் படத்திற்கு  மேரி கிறிஸ்துமஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன்  அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதுபற்றிய கூடுதல் தகவலை இப்போது பார்ப்போம்.

நடிகர் விக்கி கவுஷலுடனான திருமணம் நடந்த ஒருசில நாளிலேயே நடிக்க வந்துவிட்டார் கத்ரீனா கைஃப், இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தனது புதிய படத்தின் பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

கத்ரீனா கைஃப் சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் ஸ்ரீராம் ராகவனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியானது.  இது ஸ்ரீராம் ராகவனுடன் காத்ரீனா இணைந்து புதிய படம் பண்ணுவதற்கான   ஊகங்களுக்கு வழிவகுத்தது.

மேரி கிறிஸ்துமஸ்

இந்நிலையில் கத்ரீனா கைஃப் புதிய படம் குறித்து அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். புதிய படத்திற்கு  மேரி கிறிஸ்துமஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக காத்ரீனா கைப் அறிவித்துள்ளார், இதில்  தமிழ நடிகரான விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். என்ன ரோல் என்பது குறித்து சொல்லவில்லை பாஸ்.. வெயிட் பண்ணுவோம்..

ஸ்ரீராம் ராகவன்

சரி படத்தை எடுக்கும் ஸ்ரீராம் ராகவன் என்று பார்ப்போம். இந்த ஸ்ரீராம் ராகவன் பாலிவுட்டில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் அந்ததூண், ஏஜெண்ட் வினோத், பத்லாபூர் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர். கத்ரீனா கைஃப் அக்சய குமாருடன் நடித்த சூர்யவன்சி படம் ஒரே வாரத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் ஆனது.  தற்போது காத்ரீனா கைஃப் சல்மான் கானின் டைகர் 3 மற்றும் ஃபர்ஹான் அக்தருடன்  ஜீ லே ஜாரா  ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


விஜய் சேதுபதி படங்கள்

இந்நிலையில் தான் விஜய் சேதுபதி படத்தில் கத்ரீனா கைப் இணைந்துள்ளார்.   ரமேஷ் தௌராணி மற்றும் சஞ்சய் ரௌத்ரே தயாரிக்கிறார்கள். அடுத்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளர். விஜய்சேதுபதி தற்போது காக்கா முட்டை இயக்குனர் இயக்கத்தில் கடைசி விவசாயி, சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன், யாதுவும் ஊரே யாவரும் கேளீர் நடித்து முடித்துள்ளார். இது தவிர மலையாளத்தில்  வெங்கட் கிருஷ்ணா இயக்கத்தில் 19(1) படத்தில் நித்யா மேனனுக்கு ஜோடியாக நடிக்கிறார். பாலிவுட்டில் மும்பைக்கர் (மாநகரம் தமிழ் ரீமேக்) படத்தில் நடித்து வருகிறார்.

கமல் படம்

இது தவிர கமல் ஹாசன் , பகத் பாசில் நடிக்கும் லோகேஸ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இது தவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து முடித்த காத்துவாக்குல இரண்டு காதல் படத்தின் டப்பிங்கை விஜய் சேதுபதி அண்மையில் தான் பேசி முடித்தார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜேஎஸ் 46 படம் தயாராக உள்ளது. வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை நடிக்க உள்ளார். இதேபோல் இதேபோல் தி பேமிலி மேன் வெப் சீரிசை இயக்கிய ராஜன் டி கே இயக்கும் புதிய வெப் தொடரில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi katrina kaif movie launch on merry Christmas

People looking for online information on கத்ரீனா கைப், கேத்ரீனா கைப், விஜய் சேதுபதி, Katrina Kaif, Merry Christmas, Vijay Sethupathi will find this news story useful.