காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் இயக்குனர் மணிகண்டன்.

இந்த படத்திற்கு பிறகு, வித்தார்த் நடிப்பில் குற்றமே தண்டனை, விஜய் சேதுபதி நடிப்பில் ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கினார். இவரது அனைத்து படங்களும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆண்டவன் கட்டளை படத்திற்கு பின் இயக்குனர் மணிகண்டன் கடைசி விவசாயி படத்தை தயாரித்து இயக்கினார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டே முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடிக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவை இயக்குனர் மணிகண்டனே செய்கிறார். முதலில் இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்தார், சில காரணங்களால் சந்தோஷ் நாராயணன் இந்த படத்தின் இசையமைப்பாளராக பணிபுரிகிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் யோகிபாபு, நல்லாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் கலரிஸ்ட் பாலாஜி, படத்தின் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான மணிகண்டனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, படத்தின் பிரிண்டை சோதித்ததாக அறிவித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.