"பீஸ்ட்"-ம் நமக்கு தான்.. 'காத்துவாக்குல ரெண்டு காதலும்" நமக்கு தான்.. வேற லெவல் வினியோகஸ்தர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காத்துவாக்குல ரெண்டு காதால் படத்தின் வினியோக உரிமை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Vijay Sethupathi Kaathuvaakula rendu kaadhal movie USA UK Rights
Advertising
>
Advertising

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர்.

லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.

Vijay Sethupathi Kaathuvaakula rendu kaadhal movie USA UK Rights

இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ. காதீஜா எனும் பெயரில் சமந்தா நடிக்கிறார். கண்மனி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

இந்த படத்தின் மூன்று முதல் லுக் போஸ்டர்  (15.11.2021) அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. போஸ்டர்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள் அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் சென்ற ஆண்டு டிசம்பரில் ஒடிடி ரிலீசை தவிர்த்துவிட்டு நேரடியாக தியேட்டரிக்கல் ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக டிசம்பர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.  இந்த படம் வரும் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் வட அமெரிக்கா - பிரிட்டன் - ஆஸ்திரேலியா -ஐரோப்பா நாடுகளின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை ஹம்சினி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே வலிமை, பீஸ்ட் படங்களை வினியோகம் செய்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi Kaathuvaakula rendu kaadhal movie USA UK Rights

People looking for online information on Anirudh, Kaathuvaakula Rendu Kaadhal, KRK, KVRK, Nayanthara, Samantha, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.