விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கும் DSP படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
Also Read | தலைவர் வடிவேலு என்ட்ரி.. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ரிலீஸ் எப்போ?
கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 46 வது படத்தை அறிவித்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்கியது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முடிந்து படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக மிஸ் இந்தியா அழகி அனுக்ரீத்தி வாஸ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. . 23 வயதான திருச்சியை சேர்ந்த இவர் விளம்பர மாடலாக தற்போது வலம் வருகிறார்.இவர் உலக அழகி போட்டியில் முதல் 30 இடங்களுக்குள் வந்தவர்.
இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். விவேக் ஹர்சன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக குமார் பணியாற்ற, யுகபாரதி இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் சன் டிவி சேனலின் யூடியூப் பக்கத்தில் வெளியாகி உள்ளது. போலீஸ் அதிகாரியாக ராயல் என்ஃபீல்டு பைக்கில் விஜய் சேதுபதி டிரெய்லரில் தோன்றியுள்ளார். இந்த படத்தில் திண்டுக்கல் மாவட்ட DSP ஆக வாஸ்கோடகாமா என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் அனு கீர்த்தி, ஞான சம்பந்தம், இளவரசு, சிங்கம் புலி ஆகியோர் டிரெய்லரில் தோன்றியுள்ளனர்.
ஜனரஞ்சகமான ஆக்சன் காட்சிகளும், காமெடி காட்சிகளும், காதல் காட்சிகளும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.
Also Read | ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்'.. களமிறங்கிய A.R. ரஹ்மான்.. அவரே வெளியிட்ட ரீல்ஸ்..