அனிருத் வெளியிட்ட 'DSP' படத்தின் முதல் சிங்கிள்.. பட்டைய கிளப்பும் கொண்டாட்ட பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கும்  DSP படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | BREAKING: வாரிசு படத்தின் நெல்லை & குமரி ஏரியா உரிமம்.. கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்!

கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 46 வது படத்தை அறிவித்தார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்கியது. இந்த படத்தில் திண்டுக்கல் மாவட்ட DSP ஆக  வாஸ்கோடகாமா என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்  செங்கல்பட்டில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் கதாநாயகியாக மிஸ் இந்தியா அழகி அனுக்ரீத்தி வாஸ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. . 23 வயதான  திருச்சியை சேர்ந்த இவர் விளம்பர மாடலாக தற்போது வலம் வருகிறார்.இவர் உலக அழகி போட்டியில் முதல் 30 இடங்களுக்குள் வந்தவர்.

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். விவேக் ஹர்சன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக குமார் பணியாற்ற, யுகபாரதி இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்.

இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது என்று போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் 'நல்லா இரும்மா' என்ற பாடலை அனிருத் வெளியிட்டுள்ளார். 

இந்த பாடலை இமான் இசையில் பாடலாசிரியர் விஜய் முத்துப்பாண்டி எழுதியுள்ளார். பாடகர்கள் உதித் நாராயணன், செந்தில் கணேஷ், மாளவிகா சுந்தர் ஆகியோர் பாடியுள்ளனர்.

 

Also Read | VARISU: இசையமைப்பாளர் தமன் பிறந்தநாளில் 'ரஞ்சிதமே' பாடல் படைத்த மாஸ் சாதனை! கொண்டாடும் ரசிகர்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi DSP First Single Nalla Iruma song

People looking for online information on Anirudh, DSP, DSP First Single Nalla Iruma song, Vijay Sethupathi, Vijay Sethupathi DSP First Single will find this news story useful.