அட்லி - ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்! அவரே சொன்ன மாஸ் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகர் இணைந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | #47YearsofRajinism: “ஜில்லுமா.. எங்க குடும்பத்தோட சூப்பர்ஸ்டார்” - சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி..!

தமிழில் ராஜாரானி, மெர்சல், பிகில், தெறி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. விஜய் நடிப்பில் 'பிகில்' படம் தயாரான பொழுதே ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க ஒப்பந்தமானார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிலநாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது.

அட்லி (Atlee) இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்திற்கு 'ஜவான்' 'Jawan' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் & டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடிக்கிறார். மேலும் தமிழில் பருத்திவீரன், ராவணன், தோட்டா, மலைக்கோட்டை போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியாமணி (Priyamani) ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

இந்த படம் பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 2023 ஜூன் மாதம் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி,  முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காத்துவாக்குல சந்திப்பு நிகழ்ச்சியில் அனிருத் ரவிச்சந்திரன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த விஜய் சேதுபதி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Also Read | ஐரோப்பிய சுற்றுப்பயணம்.. அடுத்த நகருக்கு சென்ற விக்னேஷ் சிவன் & நயன்தாரா! வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi Confirmed He acted in Jawan Movie

People looking for online information on Atlee, Jawan Movie, Shah Rukh Khan, Vijay Sethupathi will find this news story useful.