விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் கதபாத்திரம்… MASS போஸ்டரோடு வெளியான தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | “ரொம்ப Emotional- ஆன கதை …” யானை Title ஏன்… இயக்குனர் ஹரியின் வைரல் Speech

விக்ரம்…

கமல்ஹாசன் நடிப்பில்  உருவாகி வரும் ‘விக்ரம்’திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்குப் பிறகு நான்காண்டு இடைவெளியில் கமலின் அடுத்த படமாக இந்த திரைப்படம் ரிலீஸாவதால் படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

படக்குழு காத்த ரகசியம்…

இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதற்கு, கமலுடன் பகத் ஃபாசில், விஜய் சேதுபதி போன்ற பிரபல நடிகர்களும் படத்தில் இருப்பதும் ஒரு காரணமாக அமைந்துள்ளன. மேலும் சூர்யாவும் கௌரவ வேடத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். ஆனால் படத்தில் இதுவரை யார் எந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்ற தகவலைக் கூட பகிராமல படக்குழு ரகசியமாக வைத்திருந்தனர். படத்தலைப்பான ‘விக்ரம்’ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கிறாரா அல்லது டிரைலரில் இடம்பெறும் குழந்தையின் பெயரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

சந்தானமாக விஜய் சேதுபதி…

இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் பெயரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது. முன்னதாக பகத் ஃபாசில் ‘அமர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கூடிய விரைவில் கமல் கதாபாத்திரத்தின் பெயரும் வெளியிடப்படும் என தெரிகிறது.

Also Read  | ”ஒரு மகத்தான நாள்… What a Man” சூப்பர் ஸ்டாரை சந்தித்த பின் ‘டான்’ இயக்குனரின் வைரல் Pics!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi character name in Vikram movie

People looking for online information on விக்ரம், விஜய் சேதுபதி, Vijay Sethupathi, Vikram Movie will find this news story useful.