VIDEO: "ஒரு ரசிகனாக.. ஒரு தொகுப்பாளனாக..".. விஜய் சேதுபதியின் மாஸ்டர் செஃப்.. லேட்டஸ்ட் ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் சமையல் நிகழ்ச்சிகளுக்கென்று ரசிகர்கள் உள்ளனர். தமிழிலும் சமையலை மையமாக வைத்து பரபரப்பான பல நிகழ்ச்சிகள் டிவி சேனல்களிலும் யூடியூப்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

எனினும் சமையல் நிகழ்ச்சிகள் புதுமையாகவும், சுவாரஸ்யமாகவும் பிரம்மாண்டமாகவும் இருந்தால் ரசிகர்களின் விருப்பமாக நிகழ்ச்சிகளாகவே மாறிவிடும். இந்நிலையில் சன்.டிவியில் பிரம்மாண்டமான மாஸ்டர் செஃப் தமிழ் சமையல் நிகழ்ச்சி பற்றிய தகவல் அதிரவைத்தது.

இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியின் புரோமோவில் விஜய் சேதுபதி வரும் விளம்பரங்கள் சன்.டி.வியில் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அதன் ஒரு புரோமோவில் ஹெலிகாப்டரில் விஜய் சேதுபதி, மாஸ் காட்டி வந்து இறங்குவதுடன் “இது மாஸ்டர் செஃப் தமிழ் சமையல் நிகழ்ச்சி.. விரைவில் உங்கள் சன்.டிவியில்” என கெத்தாக பேசுகிறார்.

இந்நிலையில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், “என் மனசுக்கு நெருக்கமான பல விஷயங்கள்ல ஒன்னு சாப்பாடு.. மனசார ரசிச்சு ருசிச்சு சாப்பிடும் நான் அந்த உணவை சமைக்குற மக்களை தொகுப்பாளனாக, ரசிகனாக உங்களோடு சேர்ந்து கொண்டாட போறேன். மாஸ்டர் செஃப் தமிழ்.. இது நம்ம மக்கள் சமைக்கும் டக்கர் சமையல்.. விரைவில் சன் டிவியில்” என கூறுகிறார்.

இந்த ப்ரோமோ விஜய் சேதுபதி ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது.

ALSO READ: அட.. டைரக்டர் முருகதாஸா இது?  அப்பவே இப்படி நடிச்சுருக்காரே? அவரே பகிர்ந்த வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi as anchor master chef viral promo

People looking for online information on MasterChef, Trending, Vijay Sethupathi will find this news story useful.