விஜய் சேதுபதி - அனுக்ரீத்தி வாஸ் நடிக்கும் புதிய படம்..! வைரலாகும் BTS புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.

Advertising
>
Advertising

விஜய் சேதுபதி நடித்து மாமனிதன், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளீர், காத்துவாக்குல ரெண்டு காதல், முகில், விடுதலை, விக்ரம், மும்பைக்கர், பிசாசு2 போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. கடந்த மார்ச் மாதம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 46 வது படத்தை அறிவித்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வருகிறது. இதில் ஐபிஎஸ் ஆக விஜய் சேதுபதி நடிக்கிறார். இயக்குனர் பொன்ராம் தனது முதல் படமான வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கதாநாயகியாக மிஸ் இந்தியா அழகி அனுக்ரீத்தி வாஸ் நடிப்பதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

23 வயதான  திருச்சியை சேர்ந்த இவர் விளம்பர மாடலாக தற்போது வலம் வருகிறார்.இவர் உலக அழகி போட்டியில் முதல் 30 இடங்களுக்குள் வந்தவர். இந்நிலையில் அனுக்ரித்தியுடன் விஜய் சேதுபதி படப்பிடிப்பில் இடையே ஸ்டூடியோவில் எடுத்த BTS புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi Anu Keerthy vas New movie Update

People looking for online information on Anu Keerthy Vas, Ponram, Vijay Sethupathi will find this news story useful.