திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை குறைவான நபர்களுடன் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து திரைப்படங்களின் எடிட்டிங், டப்பிங், பின்னணி இசையமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக விஜய் சேதுபதி , இயக்குநர் மோகன்ராஜா, விவேக், மேகா ஆகாஷ், கனிகா, இயக்குநர் மகிழ்திருமேணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்'. இந்த படத்தில் இருந்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த படத்தில் இலங்கை தமிழராக நடித்துள்ள கனிகா தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளாராம்.இந்த படத்தை வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை தயாரித்து வருகிறார்.இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.