'நண்பா !' - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மலையாளத்தில் நடித்துள்ள படத்தின் வீடியோ சாங் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடிப்பில் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் 'சிந்துபாத்'. 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' படங்களுக்கு பிறகு இந்த படத்தை அருண் குமார் இயக்கியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் அஞ்சலி, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதனையடுத்து விஜய் சேதுபதி மலையாளத்தில் நடித்துள்ள படம் 'மார்கோனி மதாய்'. இந்த படத்தில் பிரபல நடிகர் ஜெயராமும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சனில் கலத்தில் இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு ஜெயச்சந்திரன் இசையமைக்க,  சஜன் கலத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து நண்பா என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஹரிநாராயணன் எழுத, யாசின் நிஷர், ஹரிச்சரண் ஆகியோர் பாடியுள்ளனர்.

'நண்பா !' - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மலையாளத்தில் நடித்துள்ள படத்தின் வீடியோ சாங் இதோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi and Jayaram's Marconi Mathai's Video Song is out

People looking for online information on Jayaram, Vijay Sethupathi will find this news story useful.