மீண்டும் இணைந்த செக்கச் சிவந்த வானம் காம்போ.. வெளியானது 'ANNOUNCEMENT' வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடித்துள்ள அடுத்த திரைப்படம் குறித்து அசத்தலான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

பிளாக் காமெடி ஜானரில், வசனமில்லா மௌன படமாக உருவாக உள்ள திரைப்படம் "காந்தி டாக்ஸ்".

Zee Studios நிறுவனம் தயாரித்து வழங்கும் இந்த படத்தை இயக்குநர் கிஷோர் P பெலேகர் இயக்குகிறார். காந்தி டாக்ஸ் படத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

வசனம் இல்லாத சைலன்ட் திரைப்படமாக காந்தி டாக்ஸ் உருவாகி வரும் நிலையில், இதன் ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. மறந்து போன கடந்த கால மௌனப் பட சகாப்தத்தை நிகழ்காலத்தில் பார்வையாளர்களுக்கு தரும் ஒரு பேரனுபவமாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மௌன படம் என்பதால் ஏ.ஆர். ரஹ்மானின் இசை இந்த படத்தில் மிகப் பெரிய பங்கு வகிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வசனங்கள் எதுவும் இல்லை என்பதால், மொழி தடைகளை கடந்து இந்த திரைப்படம் இருக்கும் என்றும் படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, 2023 ஆம் ஆண்டு, 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் வெளியாகும் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி மற்றும் அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர், இதற்கு முன்பு செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தொடர்ந்து, தற்போது 'காந்தி டாக்ஸ்' திரைப்படத்திலும் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை பற்றி இயக்குனர் கிஷோர் P பெலேகர் பேசுகையில், "மௌனப் படம்  என்பது வித்தை காட்டும் ஒரு செயல் அல்ல. இது கதை சொல்லலின் ஒரு வடிவம். பேசும் மொழியான வசனத்தை முற்றிலும்  நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமும் சவாலும் கூட" என கூறினார்.

Zee Studios தயாரித்து வழங்கும், ‘காந்தி டாக்கீஸ்’ படத்தை Kyoorious Digital Pvt Ltd. மற்றும் Movie Mill Entertainment இணை தயாரிப்பு செய்கின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi and arvind swami to act in gandhi talks movie

People looking for online information on Aditi Rao Hydari, Arvind Swami, Gandhi Talks, Vijay Sethupathi will find this news story useful.