விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.
Also Read | ”கைய தூக்கவே முடியல ஜி”… புகழைப் புலம்ப விட்ட முத்துக்குமார் – என்ன ஆனது CWC 3-ல்?
மௌனப் படங்கள்…
சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் திரைப்படங்கள் மௌனப் படங்களாகவே தயாரிக்கப்பட்டன. அந்த காலத்தில் சார்லி சாப்ளின், பஸ்டர் கீட்டோன் உள்ளிட்ட மேதைகள் கோலோச்சி ரசிகர்களைக் கவர்ந்தன. காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சியால் சினிமாவில் ஒலி பயன்படுத்தப்பட ஆரம்பித்ததும், மௌனப் படங்களின் காலம் மறைந்தது. ஆனாலும் அவ்வப்போது வித்தியாசமான முயற்சியாக சில மௌனப் படங்கள் வெளிவருவதுண்டு.
கமலின் பேசும்படம்…
அப்படி 1987 ஆம் ஆண்டு கமல், அமலா நடிப்பில் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் தமிழில் பேசும்படம் என்றும் தெலுங்கில் புஷ்பக விமானகா என்ற பெயரிலும் வெளியானது ஒரு மௌனப்படம். இந்த படம் முழுவதும் கதாபாத்திரங்கள் எதுவும் பேசிக் கொள்வது மாதிரி காட்சிகள் இருக்காது. பின்னணி சத்தம் மட்டுமே இடம்பெற்றிருக்கும். ஒரே ஒரு காட்சியில் மட்டும் திரையரங்கில் படம் பாக்கும்போது திரைப்படத்தின் சத்தம் இடம்பெறும். பரவலான பாராட்டுகளைப் பெற்ற இந்த திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
கார்த்திக் சுப்பராஜின் மெர்க்குரி…
மௌனப் படங்களின் வரிசையில் பேசும்படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்த மெர்க்குரி திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ்….
இந்த வரிசையில் இப்போது விஜய் சேதுபதி, அதிதி ராவ் மற்றும் அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடிப்பில் காந்தி டாக்ஸ் என்ற மௌனப் படம் உருவாக உள்ளது. இந்த படத்தை ZEEஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிஷோர் பெலேகர் இயக்குகிறார். இந்த படம் பற்றி அறிவிப்பில் “ பணம் தற்போதைய காலகட்டத்தில் பேசுவது போல வார்த்தைகளை விட மௌனம் சத்தமாக பேசும். ’காந்தி டாக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது” என ஸி ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மௌனப்படம் ஒன்று முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாவதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://www.behindwoods.com/bgm8/