VIDUTHALAI: "இந்த டைம்ல நிறைய விதமாக பேசுவாங்க, கவனமாக இருக்கணும்" - சூரிக்கு VJS செல்ல அட்வைஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகியுள்ளது.

Advertising
>
Advertising

விடுதலை படத்தில் நடிகர்கள் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தங்கம் எழுதிய வேங்கச்சாமி திரைக்கதையை மூலக்கதையாகக் கொண்டும்,  ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக்  கொண்டும் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது.

பீரியட் டிராமா திரைப்படமான இப்படத்தில் புதிதாக காவல்துறையில் டிரைவராக சேரும் குமரேசன்(சூரி) அங்கு காவல்துறையினரால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வரும் மக்கள் படை தலைவர் பெருமாள் என்கிற வாத்தியார் (விஜய் சேதுபதி) பிடிபட எவ்வாறு காரணமாகிறார்? இதில் மக்கள் காவல்துறையினரை நம்புகின்றனரா அல்லது மக்கள் படை தலைவர் பக்கம் நிற்கின்றனரா? இதன் பிரச்சனை தொடங்கும் மையம் எது ? இதற்குள் நடக்கும் அரசியல் பின்னணி என்னென்ன? என்று பல கோணங்களில் உருவாகி இருக்கிறது விடுதலை திரைப்படம்.

இந்த படத்தில் இதுவரை நடிகர் சூரி நடித்ததில் இருந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சூரியின் அதே உடல் மொழியை கொண்டு சீரியஸான கதாபாத்திரத்தை கண் முன் நிறுத்தி இருக்கிறது இந்த திரைப்படம்.

இந்த படத்தின் போஸ்ட் பிர்ஸ் மீட்டில் இதுகுறித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “ஒரு காமெடி நடிகராக இருந்து பிரதானமான நடிகராக மாறுவது சாதாரண விஷயம் அல்ல. எனவே இது சூரிக்கு கிடைத்த வெற்றி. அதுவும் வெற்றிமாறன் கொடுத்த வெற்றி. பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் நிறைய பேர் நிறைய விதமாக பேசுவார்கள், அட்வைஸ் செய்வார்கள். நீங்கள் பார்த்து கவனமாக இருக்க வேண்டும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi advise to soori after Viduthalai response

People looking for online information on Soori, Vetrimaaran, Viduthalai, Vijay Sethupathi will find this news story useful.