”எனக்குதான் கத சொல்றாருனு நெனச்சேன்…. சஞ்சய் எங்கனு கேட்டாரு”.. உடைத்த விஜய்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் நேருக்கு நேர் பேட்டி தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertising
>
Advertising

விஜய்யின் நேருக்கு நேர்….

பீஸ்ட் படத்தின் ரிலீஸை ஒட்டி 10 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் விஜய் அளிக்கும் பேட்டி ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நேர்காணலை படத்தின் இயக்குனர் நெல்சனே எடுத்துள்ளார். இது சம்மந்தமாக வெளியான ப்ரோமோக்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் தற்போது பேட்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் நெல்சனிடம் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறார் விஜய்.

சஞ்சய் என்ன செய்ய போறாரு…

அதில் தன்னுடைய மகன் சஞ்சய்யின் எதிர்காலம் குறித்து பேசும்போது ‘அவரு நடிக்க போறாரா இல்ல கேமரா பின்னாடி இருந்து செயல்பட போறாருனு எனக்கு தெரியல. நான் அவருகிட்ட எதையும் போர்ஸ் பண்றது இல்ல. ஆனா நெற பேரு அவர நடிக்க கேக்குறாங்க. அவரு இப்போ வேணாம். ரெண்டு மூனு வருஷம் ஆகட்டும்னு சொல்லிட்டு இருக்காரு’ எனக் கூறியுள்ளார்.

அல்போன்ஸ் மீட்டிங்…

மேலும் இதுபற்றி பேசிய விஜய் ‘ கொஞ்ச நாள் முன்னாடி பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் என்ன பாக்கணும்னு சொன்னாரு. சரி எனக்குதான் கத சொல்ல வர்றாருனு நான் நெனச்சேன். ஆனா அவரு வந்ததும் சஞ்சய் எங்க…. அவருக்கு ஒரு கத சொல்லனும்னு கேட்குறாரு. நான் அத அவருகிட்ட சொல்லிட்டேன். ஆனால் அவரு இப்போதைக்கு வேணாம்னு அவர்கிட்ட சொல்லிடுங்க சொல்லிட்டாரு’ எனக் கூறியுள்ளார்.

ஏன் இவ்ளோ இடைவெளி

முன்னதாக இந்த நேர்காணலில் நெல்சன் விஜய்யிடம் ’10 வருஷமா ஏன் எந்தவொரு பேட்டியும் கொடுக்கல” எனக் கேட்கிறார். அதற்கு விஜய் ’ஒரு இன்சிடண்ட் நடந்தது 10 வருஷத்துக்கு முன்ன. நான் சொன்ன ஒரு வார்த்தய எழுதும்போதும் அது தப்பா கன்வே ஆயிடுச்சு. என் ப்ரண்ட்ஸ் குடும்பத்துல உள்ளவங்க எல்லாம் என்ன கூப்டு கேட்டாங்க. என்ன இவ்ளோ திமிரா பேசிருக்க, நீ இப்படிலாம் பேசமாட்டியே என கோவிச்சிக்கிட்டாங்க. அவங்களுக்கு நான் என்ன புரிய வச்சுட்டேன். ஆனால் அத படிச்ச எல்லோருக்கும் நான் புரிய வைக்க முடியாதுல. இது என்னடா வம்பா போச்சுனு அப்படியே சைலண்ட் ஆயிட்டேன்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay reveals what happened with Alphonse puthren

People looking for online information on Nelson, Sun TV, Vijay, Vijay in nerukku ner will find this news story useful.