குட்டிக்கதை கேட்க ரெடியா? 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போ? எங்கே?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Advertising
>
Advertising

Also Read | அட.. விஷ்ணு விஷால் & நம்ம பூங்குழலி ஐஸ்வர்யா லெஷ்மி நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ .. ரிலீஸ் எப்போ?

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு  சில வாரங்களுக்கு முன் சென்னையில் துவங்கியது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே"  வெளியாகியுள்ளது.
இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொல்லும் குட்டிக்கதைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். அந்த வகையில் இந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் நடிகர் விஜய்யின் குட்டிக்கதையை கேட்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Also Read | PS1: பொன்னியின் செல்வன் பற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சு.. மனதார நன்றி சொன்ன நடிகை ராதா!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Rashmika Mandanna Varisu Movie Audio Launch Deets

People looking for online information on Rashmika Mandanna, Varisu, Varisu Movie Audio Launch Updates, Vijay will find this news story useful.