'வாரிசு' புது லுக்கில் தளபதி விஜய்.. ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த செல்ஃபி.. தீயாய் பரவும் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜுவின் தயாரிப்பில் 'வாரிசு' படம் உருவாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | 'நானே வருவேன்'.. தெலுங்கு ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தெலுங்கு நடிகர் & தயாரிப்பாளர்!

'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய பட்டாளமே நடிக்கிறது.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. வாரிசு படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் , கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம்   நடந்தது குறிப்பிடத்தக்கது.

‍ இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு  ஐதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய்யுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நடிகர் விஜய் புதிய லுக்கில் இடது பக்க தலை முடி சரிந்த நிலையில் பிங்க் நிற உடையில் காட்சியளிக்கிறார்.

இந்த படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது.

Also Read | "நீங்க எனக்கு இன்னொரு அம்மா.." விக்னேஷ் சிவன்! யாருக்கு வாழ்த்து சொல்லிருக்காரு பாருங்க..

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Rashmika Mandanna Selfie at Varisu Movie Shooting

People looking for online information on Rashmika Mandanna, Varisu, Varisu Movie Shooting, Vijay, Vijay Rashmika Mandanna Selfie will find this news story useful.