வாரிசு 3RD LOOK.. "அட, விஜய் அமர்ந்திருக்கும் BIKE-ல இப்படி ஒரு ஸ்பெஷல் இருக்கா?"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் 48 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டிருந்த நிலையில், அவர் அடுத்ததாக நடித்து வரும் 'வாரிசு' படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம்.. ஹீரோயின் இந்த முன்னணி இளம் நடிகையா? ஆஹா

பிரபல இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி வந்த தளபதி66 படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், 21.06.2022 அன்று வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, நேற்று (22.06.2022) இந்த படத்தின் செகண்ட் லுக் மற்றும் மூன்றாவது லுக் போஸ்டர்களும் வெளியாகி இருந்தது.

The Boss Returns

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி இருக்க, இரண்டாவது போஸ்டரில், சில குழந்தைகளுடன் சிரித்த படி அமர்ந்திருக்கும் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. இதன் பின்னர் கடைசியாக  வெளியான மூன்றாவது லுக் போஸ்டரில், பைக் ஒன்றின் மீது நடிகர் விஜய் அமர்ந்திருக்க, மிகவும் ஸ்டைலான லுக்கில் விஜய் இருக்கிறார். மேலும், இந்த மூன்று போஸ்டர்களிலும், "The Boss Returns" என்ற கேப்ஷன் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

'வாரிசு' படத்தில், நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

பைக்கின் பின்னணி

இந்நிலையில், மூன்றாவது லுக் போஸ்டரில், நடிகர் விஜய் அமர்ந்திருக்கும் பைக் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. அந்த பைக் 'Jawa sc Adventure' என கூறப்படும் நிலையில், மலைப்பகுதிகளில் அதிக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நபர்கள், இந்த பைக்கினை பயன்படுத்துவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், வாரிசு படத்தில் நடிகர் விஜய் மலைப்பகுதிகளில் அதிகம் பயணம் செய்வதை விரும்புவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்குமா, அல்லது ஏதேனும் சண்டைக் காட்சிகளுக்காக இந்த பைக்கினை விஜய் பயன்படுத்தி இருப்பாரா என்பது குறித்தும் நெட்டிசன்கள் தற்போதே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே போல, இந்த வபைக்கின் விலை, இரண்டு லட்சத்து பன்னிரண்டு ஆயிரம் முதல், இரண்டு லட்சத்து 21 ஆயிரம் வரை மாடலுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. வாரிசு படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரில் வரும் Jawa Adventure பைக் குறித்த Specification மற்றும் பிற தகவலை அறிந்து கொள்ள வீடியோவைக் காண:

Also Read | ஷாருக்கான், சூர்யா சிறப்பு தோற்றத்தில்.. 'ராக்கெட்ரி' - தமிழரின் கதை.. மனம் திறக்கும் மாதவன்.!

வாரிசு 3RD LOOK.. "அட, விஜய் அமர்ந்திருக்கும் BIKE-ல இப்படி ஒரு ஸ்பெஷல் இருக்கா?" வீடியோ

Vijay next Varisu movie third look poster bike details

People looking for online information on Thalapathy 66 Movie, Thalapathy Vijay Varisu Movie, The Boss Return, Varisu movie third look poster bike details, Varisu movie thrid look poster will find this news story useful.